பொள்ளாச்சி:''தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம்'' எனதி.மு.க.தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை மாவட்டம்பொள்ளாச்சியில் நேற்றுநடந்த'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு அ.தி.மு.க.வினருக்குதொடர்பு இல்லை என்றனர். துணை சபாநாயகர் ஜெயராமன் என்மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.அ.தி.மு.க.வுக்கு சம்பந்தம் இருந்தால் ஆதாரத்தை வழங்கலாம் என முதல்வர் தெரிவித்தார்.
தற்போது அ.தி.மு.க.வை சேர்ந்த அருளானந்தம் பாபு ஹேரான்பால் ஆகிய மூவரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.அவர்களைகாப்பாற்றவே ஆளுங்கட்சி நாடகமாடுகிறது.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படிப்பட்ட கொடூரக்காரர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க. பேராடுகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சரியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் மகளிர் ஏழை மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் துவங்கப்படும்'' என்றார்.
'ஹைடெக்' மாற்றம்
ஸ்டாலின் கூட்டங்களில் 'துண்டுச்சீட்டு' வைத்து பேசிய நிலையில் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். இதனால் நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளார்.நேற்றைய பிரசாரத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பேசும்போது ஸ்டாலின் முன் பெரிய 'டிவி' திரையில் குறிப்புகள்ஓடின. 'போடியம்' முன் இருபுறமும் 'டெலிபேடு' வைக்கப்பட்டிருந்தது. 'ஐபேக்' ஊழியர் கம்ப்யூட்டர் மூலம் வாசகங்களை திரையில் ஓட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE