பொது செய்தி

தமிழ்நாடு

286 பெண்களுக்கு 'தாலிக்கு தங்கம்'

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் கோமகன் தலைமை வகித்தார்.சமூகநல அலுவலர் அம்பிகா வரவேற்றார். திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார், 286 பயனாளிகளுக்கு, தாலிக்கு தங்கம் திட்டத்தில் தங்ககாசு வழங்கினார்.பத்தாம் வகுப்பு,

திருப்பூர்:திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் கோமகன் தலைமை வகித்தார்.சமூகநல அலுவலர் அம்பிகா வரவேற்றார். திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார், 286 பயனாளிகளுக்கு, தாலிக்கு தங்கம் திட்டத்தில் தங்ககாசு வழங்கினார்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்த 81 பேர்; பட்டதாரி பெண்கள் 205 பயனாளிகளுக்கு, 1.02 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.288 கிலோ தங்க காசுகள் வழங்கப்பட்டது. திருமண நிதி உதவித்தொகை, அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் வடக்கு தொகுதியில், திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் ஒன்றியப்பகுதிகள் அடங்கியுள்ளன. நுாற்றுக்கணக்கான பயனாளிகள் விண்ணப்பித்திருந்தனர்.இருப்பினும், 2018 ல் திருமணம் செய்த, தகுதி வாய்ந்த பயனாளிகளும் தற்போது விடுபட்டுள்ளதாக நேற்று முறையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X