திருப்பூர்:பணியின் போது உயிரிழந்த துாய்மை பணியாளரின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.திருப்பூர், சூசையாபுரத்தைச் சேர்ந்தவர் முரளி, 50. மாநகராட்சி துாய்மை பணியாளர். கடந்த நான்கு நாள் முன், பூலுவபட்டி குப்பை கிடங்கில் பணியாற்றிய போது, குப்பை அள்ளும் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு மாநகராட்சி மாற்றுப் பணி வாகன ஓட்டுநர் சங்கம் மற்றும் துாய்மை பணியாளர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, ஆலங்காடு, சுகாதார பிரிவு அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஊழியர்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் அஞ்சலி ெசலுத்தினர்.அதன்பின், மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் முரளியின் மகன் பாண்டியனிடம் உதவி தொகை வழங்கப்பட்டது. நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் இதை வழங்கினார். மாநில எஸ்.சி.,- எஸ்.டி., நல வாரிய உறுப்பினர் செல்வகுமார், சுகாதார அலுவலர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE