மழைநீர் வடிகால் மூடல் :கழிவுநீரால் கொசு படை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அடுத்த காரணம்பேட்டை - - பருவாய் செல்லும் ரோட்டில், மழைநீர் வடிகால் உள்ளது.குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால் வழியாக செல்கிறது. தனியார் ஒருவரின் கட்டுமான பணிக்காக, மழைநீர் வடிகால் மூடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று, கொசுக்கள் உற்பத்தியாகி வருவதாக அப்பகுதி மக்கள்
 மழைநீர் வடிகால் மூடல் :கழிவுநீரால் கொசு படை

பல்லடம்:பல்லடம் அடுத்த காரணம்பேட்டை - - பருவாய் செல்லும் ரோட்டில், மழைநீர் வடிகால் உள்ளது.குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால் வழியாக செல்கிறது. தனியார் ஒருவரின் கட்டுமான பணிக்காக, மழைநீர் வடிகால் மூடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று, கொசுக்கள் உற்பத்தியாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது:கழிவு நீர் செல்லும் வழித்தடத்தில் தண்ணீர் செல்ல முடியாதபடி கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான கழிவுநீர் தேங்கி நின்று, துர்நாற்றம் வீசுவதுடன் கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.அருகில், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளன. கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருவதால், நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கட்டுமான பணிக்காக கழிவு நீரை தேக்கி வைப்பவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். கழிவுநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X