சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டாஸில் சிறை சென்று திரும்பியவர் மீண்டும் கைது

Added : பிப் 21, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:திருப்பூர் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, ஏ.டி., காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், 33. பனியன் தொழிலாளி. கடந்த, 19ல் பெருமாநல்லுார்ஆரம்ப சுகாதார நிலையம் முன் இவர் நிறுத்தி இருந்த பைக்கை மர்ம நபர் திருடி சென்றார்.ஊத்துக்குளி முரட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம், 20, கல்லூரி மாணவர். இவர், நாதம்பாளையம் பகுதியில் பைக்கில் சென்றார். அவ்வழியாக பைக்கில் வந்த

அனுப்பர்பாளையம்:திருப்பூர் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, ஏ.டி., காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், 33. பனியன் தொழிலாளி. கடந்த, 19ல் பெருமாநல்லுார்ஆரம்ப சுகாதார நிலையம் முன் இவர் நிறுத்தி இருந்த பைக்கை மர்ம நபர் திருடி சென்றார்.ஊத்துக்குளி முரட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம், 20, கல்லூரி மாணவர். இவர், நாதம்பாளையம் பகுதியில் பைக்கில் சென்றார். அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர், கவுதம் வைத்திருந்த மொபைல் போனை பறித்து சென்றார்.பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட ஈட்டிவீரம்பாளையம், பசுமை நகரை சேர்ந்த ரஞ்சித், 29, என்பவரை கைது செய்தனர்.இவர் மீது திருப்பூர், பெருமாநல்லூர், கோவை, அவிநாசி போலீஸ் ஸ்டேஷன்களில், 10 திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால், அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X