புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை முழுமையாக முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
புதுக்கோட்டை நரிமேட்டில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் 150.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. 400 சதுர அடியில் அமைந்த வீடுகளுடன் 23 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் வீட்டு வசதி வாரியத்தலைவர் வைரமுத்து மற்றும் குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ததால் கட்டுமான பணிகள் நிறைவடைந்து 2 ஆண்டுகளாக பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை. குடியிருப்புகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் கதவுகளை சமூக விரோதிகள் களவாடத் தொடங்கியுள்ளனர். எனவே தமிழக அரசு கட்டுமானப்பணிகளை முழுமையாக முடித்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE