திருப்பூர்:திருப்பூருக்கு பதிலாக பெருமாநல்லுாரை, ஊராட்சி ஒன்றியமாக்க முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.இது குறித்து, 'புதிய தடம்' என்ற அமைப்பு, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:பெருமாநல்லுாரில் மின்மயானம் அமைக்க வேண்டும். வடக்கு தொகுதியில், அரசு கலைக்கல்லுாரி அமைத்து, மாணவர்கள் படிக்க வழிவகை செய்ய வேண்டும்.சந்தை வளாகத்தை, நவீன வளாகமாக தரம் உயர்த்த வேண்டும். திருப்பூர் ஒன்றியத்தை, பெருமாநல்லுார் ஒன்றியம் என பெயர் மாற்றம் செய்து, அலுவலகத்தை பெருமாநல்லுாருக்கு மாற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலால் சிரமப்படும் மக்களுக்காக இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.மங்கலம், இடுவாய் ஊராட்சி பகுதிகளை, பல்லடம் ஒன்றியத்துடனும், முதலிபாளையம் ஊராட்சியை, ஊத்துக்குளி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். அல்லது, மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்.நெருப்பெரிச்சலில் இயங்கும் மாவட்ட பதிவு அலுவலகத்தில் உள்ள, பொங்கலுார் ஒன்றியத்தை, நல்லுார் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும். மங்கலம், இடுவாய் பகுதிகளை, பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்.வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வாவிபாளையத்தில், அரசு மெட்ரிக் பள்ளி துவக்க வேண்டும். பெருமாநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். வடக்கு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களுக்கு, புதிய கட்டடங்கள் கட்டித்தர வேண்டும்.பெருமாநல்லுார் வேளாண் விரிவாக்க மையத்தை, முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் திருப்பூர் வடக்கு தொகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் அவர்கள் கூறியுள்ளனர்.இந்த யோசனையை, பெருமாநல்லுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE