திருப்பூர்:திருப்பூரில், தடையை மீறி தி.மு.க., வினர் ஆட்டோ பேரணி நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூர், காங்கயம் ரோடு, பள்ளக்காட்டுப்புதுாரில் தி.மு.க., பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக, திருப்பூர் தி.மு.க., மத்திய மாவட்டம் சார்பில், ஸ்டாலின் வருகை குறித்து பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, ஆட்டோ ஊர்வலத்துக்கு தி.மு.க., வினர் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கூட்டம் நடக்க உள்ள இடத்தில் அணிவகுத்து இருந்தது. ஊர்வலம் செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின், தடையை மீறி, சென்றனர். இது தொடர்பாக ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE