திருப்பூர்:அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் ரோட்டில், இருட்டில் சென்றுவர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.அவிநாசி, மங்கலம் ரோட்டில் இருந்து, ராக்கியாபாளையம் வழியாக அம்மாபாளையம் செல்ல, உமையஞ்செட்டிபாளையம் ரோடு முக்கிய வழியாக உள்ளது. இதில், பாதி வரை, ரோடு வசதி இல்லை. மீதி வழித்தடத்தில், புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது.மங்கலம் ரோட்டில் இருந்து ஒன்றரை கி.மீ., துாரம் வழித்தடம் முழுவதும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக ரோடு தோண்டப்பட்டு, மூடிய நிலையில், கரடு முரடாக காணப்படுகிறது வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். மழை நாட்களில், சேறும் சகதியுமாக ரோடு மாறிவிடுகிறது.இதற்கு மாற்றாக, மங்கலம் ரோட்டில் இருந்து, தேவராயம்பாளையம் வழியாக அம்மாபாளையம் செல்ல, மூன்று கி.மீ., வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது.மங்கலம் ரோட்டில் இருந்து, மண்ணுக்குட்டை பகுதி வரை ரோட்டோரம் மின்விளக்குகள் வசதியும் போதுமானதாக இல்லை. இரவில், டூவீலர்களில் வருவோர், பாதுகாப்பின்மையால் அச்சமடைகின்றனர்.திருடர்கள் பயத்தால், பெண்கள் குழந்தைகளுடன் வாகனங்களில் வருபவர்கள், தவிப்படைகின்றனர். உமையஞ்செட்டிபாளையம் ரோட்டில், சிதிலமடைந்துள்ள மீதி வழித்தடத்தை புதுப்பிக்கவும், தெரு விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE