பெருங்குடி:மற்ற மாநிலங்களைப்போன்று தமிழகத்திலும் துப்புரவு பணியாளர் நல வாரியம் அமைக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: தேசிய துாய்மை பணியாளர் ஆணையம் இந்தியாவில் 1993ல் உருவாக்கப்பட்டது. முதன்முறையாக தற்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தமிழரை தலைவராக நியமித்துள்ளனர்.
இந்த ஆணையம் துப்புரவு தொழிலாளர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. செப்டிக் டேங்க் துாய்மைப்பணியில் இறந்தால் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. செப்டிக் டேங்க் துாய்மை பணிக்காக யாரும் உள்ளே இறங்கக்கூடாது என 2013ல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் ஒரு அங்கமாக தேசிய துப்பரவு பணியாளர்கள் மேம்பாட்டு நிதி உதவி ஆணையம் என உள்ளது. அதன்மூலம் கடன் வசதிகள் வழங்கப்படுகிறது.
வண்டியூர் துாய்மை பணியாளர் வேல்முருகன் சம்பளம் கொடுக்காத காரணத்தால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது வீட்டில் விசாரித்து கலெக்டரிடம் ஆலோசிக்க உள்ளேன் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE