பொது செய்தி

தமிழ்நாடு

கல்லட்டி சாலையில் தொடரும் விபத்து: சுற்றுலா வாகனங்கள் செல்ல மீண்டும் தடை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி-கல்லட்டி சாலையில் தொடரும் விபத்தால், சுற்றுலா வாகனங்கள் செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி-கல்லட்டி வழியாக முதுமலை செல்ல, சுற்றுலா பயணிகள் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தினர். வெளிமாநிலம், வெளிமாவட்டத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க திணறுகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவது
 கல்லட்டி சாலையில் தொடரும் விபத்து:  சுற்றுலா வாகனங்கள் செல்ல மீண்டும் தடை

ஊட்டி:ஊட்டி-கல்லட்டி சாலையில் தொடரும் விபத்தால், சுற்றுலா வாகனங்கள் செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி-கல்லட்டி வழியாக முதுமலை செல்ல, சுற்றுலா பயணிகள் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தினர். வெளிமாநிலம், வெளிமாவட்டத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க திணறுகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.கடந்த, 2018ம் ஆண்டு சுற்றுலா வாகனங்கள் இச்சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சுற்றுலா வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டது.அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, அடுத்தடுத்த, ஐந்து முறை விபத்து ஏற்பட்டு, பலர் காயமடைந்தனர். நேற்று மதியம், ஊட்டியிலிருந்து காரில் கேரளா சுற்றுலா பயணிகள் கல்லட்டி சாலையில் சென்றனர். 21வது கொண்டை ஊசி வளைவில் நிலைத் தடுமாறி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.காரில் இருந்த ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். புதுமந்து போலீசார் விசாரிக்கின்றனர். அடிக்கடி விபத்தால், எஸ்.பி., பாண்டியராஜன் உத்தரவின்படி, கல்லட்டி சாலையில் நேற்று முதல் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தலைகுந்தா சோதனை சாவடியில், போலீசார் சுற்றுலா வாகனங்களை கண்காணித்து திருப்பி விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X