சிவகங்கை:''அரசு நிர்வாகத்தில் ஊழல் இல்லாத நாடு தான் வளர்ந்துள்ளது. எனவே இங்கு ஊழல் அகற்றப்பட வேண்டும்'' என சிவகங்கையில் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது கிராமங்களில் வாழும் விவசாயிகள் உழைப்பாளர்கள் என்றைக்கு முன்னேறுகிறார்களோ அன்று தான் நாடு முன்னேறியதாக அர்த்தம். தமிழர்களுக்கு பிற மொழிகள் அனைத்தையும் கற்கும் அறிவும் ஆற்றலும் அதிகம். அதேநேரம் 'திணிக்கும் தின்பண்டம் என்றும் இனிக்காது' என்பதை உணர வேண்டும்.
தமிழ் நிலத்தில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டாதீர்கள். எந்த அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்கிறார்களோ அவர்களே நல்ல அரசாக இருக்க முடியும். தேர்தலின் போது நல்ல நேர்மையானவர் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர்களே நல்ல வேட்பாளர்களாக இருக்க முடியும்.
விவசாயிகளுக்காக போடப்படும் சட்டங்களை அவர்களிடம் கலந்து ஆலோசித்து நிறைவேற்றி இருக்க வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE