குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னூர் ரயில்வே குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவர் தாமஸ், 21. இவர் நேற்று குன்னூர் பாலவாசி அருகே பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அடித்து விட்டு சென்றபோது, 'ஸ்டார்ட்' ஆகவில்லை. தொடர்ந்து, சாலைக்கு வந்து நிறுத்தி ஸ்டார்ட் செய்தபோது, இன்ஜினில் வெப்பம் அதிகரித்து தீப்பிடித்தது.உடனடியாக பெட்ரோல் பங்க்கில் இருந்த கருவியால் தீயை அணைத்த போதும், தீ பரவியது. தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். பழைய வாகனத்தை புதுப்பித்து இயக்கினால், இதுபோன்று தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். பெட்ரோல் பங்க் அருகிலேயே பைக் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE