ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம்.மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிசெல்வி முன்னிலை வகித்தார். மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் பேசுகையில், பெற்றோர்களின் வழிகாட்டுதலை பின்பற்றிவாழ்பவர்களே வாழ்வில் உயரமுடியும் என்பதை மாணவ சமுதாயம் உணர்ந்து செயல்பட வேண்டும். படித்தேன், பட்டம் பெற்றேன், திருமணமாகி வாழ்ந்தேன் என்ற நிலையில் வாழாமால், இந்தியாவை மாற்றி காட்டுபவர்களாக வாழவேண்டும். பெற்றோர்கள் தெய்வத்திற்கு சமமமானவர்கள். அவர்களின் அறிவுறுத்தல்களை கடைபிடித்து வாழவேண்டும்,என்றார். துணைத்தலைவர் தங்கபிரபு, சிந்துஜா, துணை தாளாளர் துர்காமீனலோசினிகமல்ராகவன்,ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, டீன் சரவணன், முதல்வர் குமரேசன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE