பஞ்சு விலை 'பறக்குது': நுாற்பாலைகள் கவலை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:பஞ்சு விலை உயர்வு ஒருபுறம்; தரம் குறைவு மறுபுறம் என, தமிழக நுாற்பாலைகள் தவிக்கின்றன.தமிழக நுாற்பாலைகள், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து, மூலப்பொருளான பஞ்சு கொள்முதல் செய்கின்றன. கடந்த ஆண்டு, நவம்பரில் பருத்தி சீசன் துவக்கத்திலேயே, ஒரு கேண்டி பஞ்சு (ஒரு கேண்டி - 356 கிலோ) கொள்முதல் விலை, 38 ஆயிரம் ரூபாயாக இருந்தது. கடந்த மாதம், 44 ஆயிரத்து 500

திருப்பூர்:பஞ்சு விலை உயர்வு ஒருபுறம்; தரம் குறைவு மறுபுறம் என, தமிழக நுாற்பாலைகள் தவிக்கின்றன.தமிழக நுாற்பாலைகள், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து, மூலப்பொருளான பஞ்சு கொள்முதல் செய்கின்றன. கடந்த ஆண்டு, நவம்பரில் பருத்தி சீசன் துவக்கத்திலேயே, ஒரு கேண்டி பஞ்சு (ஒரு கேண்டி - 356 கிலோ) கொள்முதல் விலை, 38 ஆயிரம் ரூபாயாக இருந்தது. கடந்த மாதம், 44 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த பஞ்சு விலை, தற்போது, 46 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேசன் கன்வீனர் பிரபுதாமோதரன் கூறியதாவது:ஜவுளி உற்பத்தி சார்ந்த, அனைத்து மூலப்பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து செலவுகளுடன் சேர்த்து, நுாற்பாலைகளை பஞ்சு வந்தடையும்போது, இதன் விலை ஒரு கேண்டி, 48 ஆயிரம் ரூபாய் ஆகிறது.சீசன் துவங்கிய நவம்பர் மாதம் பெய்த மழையால், பஞ்சு தரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நுாற்பாலைகளில், பஞ்சுக்கு நிகரான நுால் உற்பத்தி குறைந்துள்ளது. நுாற்பாலைகளின் உற்பத்தி செலவு, மூன்று சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நமது நாட்டை விட, மற்ற நாடுகளில் பருத்தி விலை அதிகரித்து காணப்படுகிறது; மத்திய அரசு, 10 சதவீதம் வரி விதித்துள்ளது. அதனால், பருத்தி இறக்குமதிக்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை. பருத்தி மட்டுமல்ல, பாலியெஸ்டர், விஸ்கோஸ் உள்ளிட்ட இதர பஞ்சு வகைகளின் விலையும் அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X