சாத்துார்: ஆலங்குளத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா நடந்தது .கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் மாலதி நல்ல தம்பி முன்னிலை வகித்தார். சாத்துார் தொகுதி பொறுப்பாளர் விஜய நல்லதம்பி வரவேற்றார். வெம்பக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் தங்கராஜ் பேசினார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவின் பாலகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கிவைத்தார். நகர செயலாளர் எம்.எஸ்.கே. இளங்கோவன் பெற்றுக்கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு 1500 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகத்துடன், எழுதுபொருட்கள், 2500 பேருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் இந்திராகண்ணன் பங்கற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE