திருப்பூர்:கோவையில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தில், பா.ஜ., இளைஞரணியினர், மோடி, தாமரை படம் மற்றும் தமிழ், ஆங்கில வாசகங்களுடனான 'டி-சர்ட்' அணிந்து கலந்துகொள்கின்றனர்.கோவையில், வரும் 25ம் தேதி, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகிறார். திருப்பூர் மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி சார்பில், கூட்டத்தில் திரளாகச் சென்று பங்கேற்க ஏற்பாடு நடந்து வருகிறது. இளைஞர் அணியினர் அணிந்து செல்லும் வகையில் 'டி-சர்ட்' தயார் செய்யப்பட்டுள்ளது.மூவர்ண கொடி நிறத்திலான 'டி - சர்ட்' முன்புறம், தாமரை மற்றும் பிரதமர் மோடி படம், 'தமிழையும் தேசத்தையும் காக்கும்' என்ற தமிழ் வாசகம் மோடியின் படத்துக்கு மேலும், அதன் கீழ், ஆங்கிலத்தில், 'தி கிரேட்டஸ்ட் இண்டியன்', 'யெஸ் இண்டியா கேன்' ஆகிய வாசகமும் இடம்பெற்றுள்ளன.இந்த டி-சர்ட் அணிந்து சென்று கூட்டத்தில் பங்கேற்கவும், அங்கு கட்சியினருக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE