பொது செய்தி

தமிழ்நாடு

தோல்வி தந்த ஊர் பெயரால் மீண்டும் ஜெயித்தவன் நான்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மதுரை: ''மாநகராட்சி தேர்தலில் தோற்றபோது செல்லுார் என்ற பெயர் தான் காரணம் என்றனர். அதே பெயரை வைத்தே மீண்டும் ஜெயித்து பத்தாண்டுகளாக ஒரே துறையில் அமைச்சராக இருப்பவன் நான் மட்டும் தான்,'' என, மதுரை செல்லுாரில் ரூ.19 லட்சத்தில் அமைக்கப்பட்ட கபடி வீரர்கள் சிலையை திறந்து அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.கபடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ் கார்டு வழங்கி அமைச்சர் பேசியதாவது:

மதுரை: ''மாநகராட்சி தேர்தலில் தோற்றபோது செல்லுார் என்ற பெயர் தான் காரணம் என்றனர். அதே பெயரை வைத்தே மீண்டும் ஜெயித்து பத்தாண்டுகளாக ஒரே துறையில் அமைச்சராக இருப்பவன் நான் மட்டும் தான்,'' என, மதுரை செல்லுாரில் ரூ.19 லட்சத்தில் அமைக்கப்பட்ட கபடி வீரர்கள் சிலையை திறந்து அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.

கபடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ் கார்டு வழங்கி அமைச்சர் பேசியதாவது: மதுரைக்காரன்னா சாதிப்பான் என்ற வல்லமையை காட்ட வேண்டும். பெத்தானியாபுரம் முதல் சமயநல்லுார் வரை ரூ.78 கோடியில் இருபக்கமும் சாலை விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. தண்ணீர் பஞ்சம் என்ற நிலையை மதுரையில் மாற்றி காட்டியுள்ளேன், என்றார். அவருக்கு அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா வீரவாள் பரிசளித்தார். மாநகராட்சி கமிஷனர் விசாகன், முதன்மை பொறியாளர் அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒய்.எம்.சி.சி. வாலிபால் கிளப் ஏற்பாடுகளை செய்தது.பின் அமைச்சர் கூறியதாவது: இந்தியாவில் கபடி வீரர்களுக்கு சிலை எங்கும் கிடையாது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு துறை மூலம் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம். ஸ்டாலின் சொல்வதையெல்லாம் தள்ளுபடி செய்வதென்றால் வரவு செலவு திட்டத்தில் இதற்கான இட ஒதுக்கீட்டில் வருமா என அவரிடம் கேட்க வேண்டும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என அறிவிக்கக் கூடாது. ஏற்கனவே 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி மக்களை ஏமாற்றியுள்ள ஸ்டாலின் ஏதாவது சொல்லி செல்வோம் என பேசி வருகிறார், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X