ராஜாக்கள் வேஷம் மூன்று மாதத்தில் கலைந்து விடும்! ஸ்டாலின் ஆருடம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜாக்கள் வேஷம் மூன்று மாதத்தில் கலைந்து விடும்! ஸ்டாலின் ஆருடம்

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (2)
Share
பொள்ளாச்சி:''பாலியல் வழக்கின் பின்னணியில், அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறது. மூன்று மாதத்தில், இந்த ராஜாக்கள் வேஷம் கலைந்து விடும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:லோக்சபா தேர்தல் பிரசாரத்தில்,
 ராஜாக்கள் வேஷம் மூன்று மாதத்தில் கலைந்து விடும்! ஸ்டாலின் ஆருடம்

பொள்ளாச்சி:''பாலியல் வழக்கின் பின்னணியில், அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறது. மூன்று மாதத்தில், இந்த ராஜாக்கள் வேஷம் கலைந்து விடும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், 'பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி என்று சொன்னேன். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்துக்கு, அ.தி.மு.க.,வினர் தொடர்பு இல்லை என்றனர்.

துணை சபாநாயகர் ஜெயராமன், என்மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார். அ.தி.மு.க.,வுக்கு சம்பந்தம் இருந்தால் ஆதாரத்தை வழங்கலாம் என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தற்போது, அ.தி.மு.க.,வை சேர்ந்த அருளானந்தம், பாபு, ஹேரான்பால் ஆகிய மூவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. அவங்களை காப்பாற்றவே ஆளுங்கட்சி நாடகமாடுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படிப்பட்ட கொடூரக்காரர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக, தி.மு.க., பேராடுகிறது.அ.தி.மு.க., அரசு சாட்சிகளை அழித்து சதி வேலையில் ஈடுபட்டது. பாதிக்கப்பட்ட பெண் பெயரை எஸ்.பி.,யே வெளியிட்டார்.

அந்த பெண்ணின் அண்ணன், வீடியோ எடுத்து மிரட்டியவர்களை பிடித்து, வீடியோ, மொபைல்போன், ஆதாரங்களுடன் போலீசில் ஒப்படைத்தார். ஆனால், வழக்குப்பதிவு செய்யவில்லை.அ.தி.மு.க., பிரமுகர் 'பார்' நாகராஜ் சீனுக்கு வந்து, பாதித்த பெண்ணின் அண்ணனை தாக்கியதும், பிரச்னை பெரிதாவது தெரிந்து, மூன்று பேரை கைது செய்தனர். நான் அறிக்கை வெளியிட்ட பிறகே, திருநாவுக்கரசை கைது செய்தனர்.

நான் அறிக்கை வெளியிடாமல் இருந்திருந்தால், இந்த வழக்கை ஆளுங்கட்சி அப்பவே ஊத்தி மூடியிருக்கும். இதுதான் பெண்களை பாதுகாக்கும் அரசா, வெட்கப்பட வேண்டாமா.பாலியல் வழக்கில் சி.பி.ஐ., ஒரு காரை பிடித்துள்ளது. அந்த காரின் பதிவுஎண், டிஎன் 02 ஏஎஸ் 0222. அந்த கார் அ.தி.மு.க., பிரமுகர் ஜேம்ஸ்ராஜா பெயரில் இருக்கிறது என, தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் வழக்கின் பின்னணியில் அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறது. இதை சொல்வதால், என் மீது வழக்கு போட்டால், சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இந்த வழக்கில், சி.பி.ஐ., சரியான நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறோம். இல்லாவிட்டால், மூன்று மாதத்தில், இந்த ராஜாக்கள்வேஷம் கலைந்து விடும்; என் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. இந்த வெட்கக்கேடான செயலுக்காக, முதல்வர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


மகளிர் கடன் தள்ளுபடி

ஸ்டாலின் அறிவிப்புபொள்ளாச்சி நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசியதாவது:நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகள், மகளிர், ஏழை மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் துவங்கப்படும். மகளிர் குழுக்கள், கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம். என்னுடைய இந்த அறிவிப்பை, முதல்வர் இ.பி.எஸ்., கேட்டுட்டு இருப்பார். நான் சொல்வதை வரிசையாக செயல்படுத்திட்டு இருக்கார். இந்த உண்மையை சொன்னா கோபப்படுகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X