சென்னை:ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மை ஜியோ ஸ்டோர்களில், சாம்சங், 'கேலக்சி எப் 62' மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சாம்சங் நிறுவனம், கேலக்சி எப் 62 என்ற, நவீன, 'ஸ்மார்ட்' போனை தயாரித்துள்ளது.அந்த போன், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மை ஜியோ ஸ்டோர்களில் மட்டும், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அதன் விற்பனை, இம்மாதம், 22ம் தேதி முதல் துவங்குகிறது.புதிய கேலக்சி எப் 62, அதிக ஸ்டோரேஜ், அதிக நேரம் செயல்பட கூடிய பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
அனைத்து அம்சங்களும் கூடிய, 6 ஜிபி ரேம் மாடல் விலை, 21 ஆயிரத்து, 499 ரூபாய். அடுத்த படியாக, 8 ஜிபி ரேம் மாடல் விலை, 23 ஆயிரத்து, 499 ரூபாய்.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு உள்ளடக்கிய, 2,500 ரூபாய் தள்ளுபடி அல்லது, சிட்டி வங்கி கிரெடிட் கார்டு மாதாந்திர தவணையில், 2,500 ரூபாய் வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.
இதுகுறித்து, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிரையன் பேட் கூறுகையில், ''சாம்சங் கேலக்சி எப் 62 போனை, ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்கள், நாடு முழுதும் உள்ள வாடிக்கையாளர்கள் நேரடியாக வாங்க வசதிகளை வழங்கும்.''மலிவு விலையுடன் கூடிய இந்த போன், எங்கள் வாடிக்கையாளரை மகிழ்விக்கும்,'' என்றார்.
ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்களில், கேலக்சி எப் 62 போனை வாங்க விரும்பும் ஜியோ வாடிக்கையாளர்கள், அறிமுகத்தின் போது, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சலுகைகளை பெறலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE