கோவை:கோவையில் பிரதமர் பங்கேற்கும் பொதுக் கூட்டமுன்னேற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து பா.ஜ., மாநிலத் தலைவர் முருகன் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கோவை, 'கொடிசியா' அருகேயுள்ள மைதானத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம்வரும், 25ம் தேதி நடக்கிறது. தொண்டர்கள்கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மைதானத்தில்மேடை அமைப்பதற்கான பூமி பூஜை, சமீபத்தில் நடந்தது. இந்நிலையில், நேற்று கோவை வந்த பா.ஜ., மாநிலத் தலைவர் முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.அவிநாசி ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடந்தது.கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறுகையில்,''பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேடை அமைப்பது, பார்க்கிங், உணவு, விளம்பரம், சமூக வலைதளம் என, 26 துறைகள் பிரித்து, ஆட்கள் தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினோம். நாளை(இன்று) முதல் மைதானத்தில்பணிகள் துவங்குகின்றன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE