சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்., ஆர்ப்பாட்டம்: 41 பேர் கைது

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மதுரை: மத்திய அரசின் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மதுரையில் நகர் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாஹசன், சையதுபாபு, மணிமாறன், சுபா வெங்கட், ரவிச்சந்திரன், பிஸ்மில்லாகான், மாவட்ட துணை தலைவர் மயிலேறி, மகிளா காங்., தலைவி ஷாநாவாஸ் பேகம், நிர்வாகிகள்

மதுரை: மத்திய அரசின் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மதுரையில் நகர் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாஹசன், சையதுபாபு, மணிமாறன், சுபா வெங்கட், ரவிச்சந்திரன், பிஸ்மில்லாகான், மாவட்ட துணை தலைவர் மயிலேறி, மகிளா காங்., தலைவி ஷாநாவாஸ் பேகம், நிர்வாகிகள் நளினி, மலர் பங்கேற்றனர்.இதையடுத்து மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்த கட்டபொம்மன் சிலையில் இருந்து ஜான்ஸிராணி பூங்கா இந்திரா சிலை நோக்கி பாதயாத்திரை செல்ல முயன்றனர். அனுமதி இல்லாததால் அவர்களை போலீசார் தடுத்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் நகர் தலைவர் கீழே விழுந்து காயமுற்றார். தடையை மீறிச்சென்றதாக பெண்கள் உட்பட41பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X