மதுரை: 'ஜி.எஸ்.டி., குறைகளை களைய மத்திய நிதியமைச்சர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்,' என, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மதுரையில் சங்க தலைவர் ஜெயபிரகாசம், கவுரவ செயலாளர் வேல்சங்கர் கூறியதாவது: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் உள்ள குறைகளை களைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்,உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய தலைவர் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு கலந்துரையாடல் கூட்டம் நடத்த வேண்டும். தமிழகம், கேரள மக்களுக்கு தேவையான பட்டாணி இறக்குமதிக்குஅனுமதி அளித்து, தமிழகத்திலுள்ள 2000 தொழிற்சாலைகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகே சால்ட் குவார்ட்டர்ஸில் நான்காவது ரயில் முனையம் அமைக்க வேண்டும். மதுரையில் விமான நிலையம் அருகே துாத்துக்குடி ரோட்டில் ரூ.250 கோடியிலான மேலே விமான ஓடுதளம், கீழேநான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.இதுகுறித்து சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் வலியுறுத்தப்பட்டது, என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE