பொது செய்தி

தமிழ்நாடு

மாநில மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மதுரை: கோவையில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் சார்பில் நடந்த மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுகளில் மதுரை வீரர்கள் 54 பதக்கங்களை வென்று சாதித்தனர்.38 மாவட்டங்களைச் சேர்ந்த 1,200 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மதுரை வீரர், வீராங்கனைகள்: கணேசன் வட்டு எறிதலில் தங்கப்பதக்கம், குண்டு எறிதலில் வெள்ளி, ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்றார்.மனோஜ்

மதுரை: கோவையில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் சார்பில் நடந்த மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுகளில் மதுரை வீரர்கள் 54 பதக்கங்களை வென்று சாதித்தனர்.38 மாவட்டங்களைச் சேர்ந்த 1,200 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மதுரை வீரர், வீராங்கனைகள்: கணேசன் வட்டு எறிதலில் தங்கப்பதக்கம், குண்டு எறிதலில் வெள்ளி, ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்றார்.மனோஜ் குண்டு எறிதலில் தங்கம், வட்டு, ஈட்டி எறிதல்,100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிபதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் சந்தோஷ்குமார் தங்கம், குண்டு, ஈட்டி எறிதலில் பிரசாந்த் தங்கம், வட்டு எறிதலில் வெள்ளி, ஈட்டி எறிதலில் நீலாவதி வெள்ளி,வட்டு எறிதலில் வெண்கலம் வென்றனர்.வட்டு, ஈட்டி எறிதலில் ஜாஸ்மின்தங்கம், 100 மீட்டர் வீல்சேர் போட்டியில் வெண்கலம் வென்றார். வட்டு, ஈட்டி எறிதலில் குருநாதன் தங்கம், குண்டு எறிதலில் வெள்ளி, 100, 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் அமுல்யா ஈஸ்வரி தங்கம், குண்டு, வட்டு மற்றும் ஈட்டி எறிதலில் ராமுத்தாய் தங்கம் வென்றனர்.குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் ரூபா தங்கப்பதக்கம், நீளம் தாண்டுதல், வட்டு, குண்டு எறிதலில் சோணை தங்கம், குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் அருள்மொழி தங்கம் வென்றனர். ஈட்டி, வட்டு எறிதலில் பூங்கொடி வெள்ளி, குண்டு எறிதலில் வெண்கலம், குண்டு எறிதலில் சங்கர் சத்யா தங்கம், நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்றனர்.குண்டு எறிதலில் திவ்ய பாரதி வெள்ளி , வட்டு எறிதலில் கலாதேவி வெள்ளி, குண்டு எறிதலில் வெண்கலம், வட்டு, ஈட்டி எறிதலில் ஷாலினி தங்கம், குண்டு எறிதலில் வெள்ளி வென்றனர்.ரமேஷ் குமார் வட்டு எறிதலில் வெண்கலம், மீனா 100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதலில் வெள்ளி, குண்டு எறிதலில் பாத்திமா வெள்ளி, வட்டு எறிதலில் வெண்கலம், ராகுல் 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றனர்.நீளம் தாண்டுதல், 200மீ ஓட்டத்தில் அபிநயா வெண்கலம், 400 மீட்டர் ஓட்டத்தில் முத்துப்பாண்டி தங்கம், 100 மீ ஓட்டத்தில் வெண்கலம், குண்டு, வட்டு எறிதலில் இளையராணி வெள்ளி, நீளம் தாண்டுதலில் அன்பரசன் தங்கம், 100, 200 மீட்டர் ஓட்டத்தில் நந்தினி தங்கம் , நீளம் தாண்டுதலில் வினோத் வெண்கலம், 800 மீட்டர் ஓட்டத்தில் கார்த்திக் ராஜா வெண்கலமும் பெற்றனர். அமைச்சர் வேலுமணி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். வீரர்களை பயிற்சியாளர் ரஞ்சித்குமார் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X