அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் நிகழ்ச்சியில் செம 'செட்டப்'

Added : பிப் 21, 2021
Share
Advertisement
உடுமலை:'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், மக்களிடம் குறை கேட்பதாக, கூட்டணி நிர்வாகிகளை, 'செட்டப்' செய்து, தாராபுரத்தில், பேச வைத்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்,' என்ற தலைப்பில், உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம் சட்டசபை தொகுதி மக்களிடம், ஸ்டாலின் குறைகேட்பார் என தெரிவிக்கப்பட்டது.இதற்காக, மக்களிடம்

உடுமலை:'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், மக்களிடம் குறை கேட்பதாக, கூட்டணி நிர்வாகிகளை, 'செட்டப்' செய்து, தாராபுரத்தில், பேச வைத்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்,' என்ற தலைப்பில், உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம் சட்டசபை தொகுதி மக்களிடம், ஸ்டாலின் குறைகேட்பார் என தெரிவிக்கப்பட்டது.இதற்காக, மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பெட்டியில் போட்டு, அதிலிருந்து ஸ்டாலின் எடுக்கும் மனுவுக்கு உரியவர் பேசலாம் என்றனர். கிராம மக்கள் புகார் மனுக்களை குவித்தனர். ஆனால், ஏற்கனவே, திட்டமிட்டு, பேசும் நபர்களை தேர்வு செய்து, அவர்களே, கூட்டத்தில் பேசினர்.முதலில் பேசிய மனுதாரர் செல்வம், மா.கம்யூ., கட்சியின் சார்பு அமைப்பான, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின், மாநில நிர்வாகியாக உள்ளார்.அடுத்து, மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் அமராவதி அணை பிரச்னைகள் குறித்து, மடத்துக்குளம் ஒன்றிய ம.தி.மு.க., செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.தொகுதி பிரச்னைகள் குறித்து, கடைசி வரை எந்த சாமான்ய மக்களும் பேச அழைக்கப்படவில்லை. திட்டமிட்டு, கூட்டணி கட்சி நிர்வாகிகளையும், புகார் மனுக்களையும் தயார் செய்து, அதற்கான பதில்களை, ஸ்டாலின் விரிவாக பேசும் வகையில், நிகழ்ச்சியை 'செட்டப்' செய்திருந்தனர். இதனால், குறைகளை சொல்ல காத்திருந்த, மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X