அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆரத்தி எடுத்தால் ரூ.1௦௦ செங்கோட்டையன் தாராளம்

Added : பிப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோபி:அமைச்சர் செங்கோட்டையனுக்கு, ஆரத்தி எடுத்தால், 100 ரூபாய் கிடைக்கும் என்பதால், பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஈரோடு மாவட்டம், கோபி சட்டசபை தொகுதியில், ஏழு முறை வெற்றி பெற்றுள்ள, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சுப நிகழ்வுகள் முதல், துக்க காரியம் வரை, தொகுதிக்குள் எதுவாயினும், வீடு தேடி சென்று விடுவார்.நலத்திட்ட விழாவுக்கு சென்றால், அவருக்கு பெண்கள்
 ஆரத்தி எடுத்தால் ரூ.1௦௦ செங்கோட்டையன் தாராளம்

கோபி:அமைச்சர் செங்கோட்டையனுக்கு, ஆரத்தி எடுத்தால், 100 ரூபாய் கிடைக்கும் என்பதால், பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபி சட்டசபை தொகுதியில், ஏழு முறை வெற்றி பெற்றுள்ள, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சுப நிகழ்வுகள் முதல், துக்க காரியம் வரை, தொகுதிக்குள் எதுவாயினும், வீடு தேடி சென்று விடுவார்.நலத்திட்ட விழாவுக்கு சென்றால், அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுப்பர். அப்போது தட்டில், 100 ரூபாய் போடுவது வழக்கம்.

தற்போது, சட்டசபை தேர்தல் நெருங்குவதால், தொகுதிக்குள் தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கிராமங்களுக்கு செல்லும் அமைச்சருக்கு, பெண்கள் போட்டி போட்டு ஆரத்தி எடுக்கின்றனர்.ஆரத்தி தட்டுடன், 50 பெண்கள் நின்றாலும், வரவேற்பை ஏற்று, ஒவ்வொரு தட்டிலும், 100 ரூபாய் போடுகிறார். இதனால் பல இடங்களில், சிறுமியர் கூட ஆரத்தி தட்டுடன், அமைச்சருக்காக காத்திருப்பதை பார்க்க முடிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-பிப்-202110:24:26 IST Report Abuse
Bhaskaran தாத்தா அவர் பிள்ளை பேரன் மூன்று பெரும் பத்துபைசாகூடதாரமாட்டாங்க .அந்தக்காலத்தில் வீராசாமி கொடுப்பார் பிறகு மாவட்ட செயலாளர் அன்பழகன் கொடுப்பார் இப்போ பேரன் உதயநிதிகூட எந்த அல்லக்கை போகிறதோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X