திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், உதவி தோட்டக்கலை அலுவலர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின் ஐந்தாவது தளத்தில், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. நடப்பாண்டு திட்டப்பணிகள் குறித்த தணிக்கை, இங்கு நடந்து வருகிறது.வெள்ளகோவில் உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ், 38, தணிக்கையின் இடையே, டீ குடிப்பதற்காக, வெளியே வந்துள்ளார். டீ டம்ளரை கையில் வாங்கியதும், திடீரென மயங்கி விழுந்தார். உடனிருந்த அலுவலர்கள், 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. திருவண்ணாமலையை சேர்ந்த சுரேஷுக்கு, மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இச்சம்பவம், கலெக்டர் அலுவலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE