பேரையூர்: ''மக்களின் குறைகளை தீர்க்கும் அட்சய பாத்திரமாக முதல்வரின் உதவி மையம் (கட்டணமில்லா தொலைபேசி 1100) உருவாக்கப்பட்டுள்ளது,'' என, பேரையூர் அருகே டி.குன்னத்துார் அம்மா கோயிலில் 2868 பேருக்கு ரூ.15.57 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் உதயகுமார் பேசினார்.
அவர் பேசியதாவது: மக்களின் எண்ணங்களை அறிந்து திட்டங்களை வழங்குவதில் நாட்டிற்கு முன்னோடியாக முதல்வர் பழனிசாமி திகழ்கிறார். முன்பு ஏழை குடும்பங்களில் மஞ்சள் கிழங்கை தாலிகயிறு கட்டி திருமணம் நடத்துவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழைகளுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கினார். தற்போதைய முதல்வர் அதை 8 கிராம உயர்த்தினார்.இன்றைக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் விதம் மனுக்களை வாங்கி பெட்டியில் வைத்து பூட்டு போட்டு கொண்டு சென்னை கொண்டு செல்கிறார். பொதுவாக மனு பெற்றால் அதை படித்து பார்க்க வேண்டும். மனுக்களை கணினியில் ஏற்றி அரசு அதிகாரிகள் தீர்வு கண்டுவருகின்றனர். ஆனால் ஸ்டாலின் ஒரு போதும் பதவிக்கு வரப்போவதுமில்லை. அந்த பெட்டியை திறக்கப் போவதுமில்லை. மக்கள் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க தயாராகவும் இல்லை, என்றார்.கலெக்டர் அன்பழகன், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, ஆர்.டி.ஓ.,க்கள் சவுந்தர்யா, ராஜ்குமார், தாசில்தார்கள் முத்துப்பாண்டி, திருமலை, சாந்தி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE