திருப்பூர்:திருப்பூரில் ஸ்டாலின் பங்கேற்கும் பிரசார கூட்டம் நடக்கும் பகுதி முழுவதும் மழையால் சகதியாக மாறியது.
திருப்பூர், காங்கயம் ரோடுபள்ளக்காட்டுப்புதுாரில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று காலை 8:00 மணிக்கு, தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக, பிரமாண்ட மேடை, தொண்டர்கள் அமரும் வகையில் பந்தல், வாகனங்கள் நிறுத்துமிடம், வந்து செல்லும் வழிப்பாதை என, ஏற்பாடு செய்யப்பட்டது.கூட்டம் நடக்கும் இடம் தனியாருக்குச் சொந்தமான காலி நிலம். விழாவுக்காக நிலத்தை சமப்படுத்தி, தரையில் விரிப்பு போடப்பட்டுள்ளது.
இருப்பினும் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் பந்தலுக்கு வெளியே மண் தரையாகவே உள்ளது.இதன் அருகே ஓடை அமைந்துள்ளது. நேற்று காலை திருப்பூர் பகுதியில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதி, சேறும் சகதியுமாக மாறியது.மழை நின்று ஈரம் காய்ந்த பின், அதன் மீது மேலும் மண் லோடு கொட்டி சகதியை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தடை விதித்தும் மீறல்
ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகளை வரவேற்கும் வகையில் நகரப் பகுதியில் கொடிகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே மேம்பாலம் மீது வரிசையாக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மாநகர போலீஸ் எல்லையில் உள்ள ரோடுகளின் டிவைடர், பாலங்கள் ஆகியன மீது எந்த கொடி மற்றும் பேனர் வைக்க கூடாது என போலீசார் விதித்த தடையையும் பொருட்படுத்தாமல் இவை அமைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE