உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
என்.சிவசுந்தர பாரதி, காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: ரூபாய் நோட்டுகளில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படம் இடம்பெறக் கோரிய வழக்கில், மத்திய அரசு பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நேதாஜியின் தியாகத்தை, இந்நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். ஆனால், ரூபாய் நோட்டுகளில், அவரின் படம் இடம்பெறுவது என்பது, அவ்வளவு சாத்தியமானது அல்ல. ரூபாயில், தேச தந்தை காந்தியடிகளின் படம் இருப்பது தான், சிறப்பு. அவரின் அகிம்சை, உலகம் முழுதும் பரவ வேண்டும். ரூபாய் நோட்டில், நேதாஜி படம் அச்சடிக்க அனுமதி அளித்தால், அதை தொடர்ந்து அம்பேத்கர், நேரு உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை எழும். அதை, தவிர்க்க முடியாது.

தியாகிகளின் படங்களைத் தொடர்ந்து ஜெயலலிதா, கருணாநிதியின் படங்களும் இடம்பெற வேண்டும் என கழகத்தினர், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பரே... அதை எப்படி தடுப்பது? ரூபாய் நோட்டில், பிற தலைவர்களின் படம் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கை, ஆபத்தில் முடியலாம்; உஷார்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE