மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் இரட்டை அகல ரயில் பாதை, மின்மயமாக்கம், உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் மல்லையா அறிவுறுத்தினார்.
வாஞ்சிமணியாச்சி - துாத்துக்குடி, கங்கைகொண்டான் - திருநெல்வேலி, ஆண்டிபட்டி- தேனி இரட்டை அகல ரயில் பாதை, ராமேஸ்வரம் மின்மயமாக்க பணி நிலவரங்களை கூடுதல் பொது மேலாளர் கேட்டறிந்தார். கோட்ட மேலாளர் லெனின், கூடுதல் மேலாளர் மன்சூகானி, மூத்த வர்த்தக மேலாளர் பிரசன்னா, கோட்ட அதிகாரிகள் ரதி பிரியா, முகைதீன் பிச்சை, மருத்துவ கண்கணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.பின் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தார். ஸ்டேஷனை துாய்மையாக பராமரித்ததற்காக ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.இன்று(பிப்., 21) சிறப்பு ரயிலில் மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பணிகளை ஆய்வு செய்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE