கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விராலிமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு கோரிக்கை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் குடமுழுக்கை, தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும், 25ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், குடமுழுக்கு விழாவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, தமிழ்

புதுக்கோட்டை:விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் குடமுழுக்கை, தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும், 25ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், குடமுழுக்கு விழாவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என, தெய்வீக தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், இப்பேரவையின் புதுக்கோட்டை ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் தலைமையில், நேற்று தமிழ்க்கலை இலக்கியப் பேரவையினர், தமிழ் தேசிய பேரியக்கத்தின் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரூர் ஆணிலையப்பர் கோவில் குடமுழுக்கு விழாவின்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், இனி தமிழகத்தில் அனைத்து தமிழ் கோவில்களிலும், குடமுழுக்கு விழா நடத்தும்போது, தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்றும், மீறும் கோவில்களுக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து, தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவும், நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ் மந்திரங்களும் ஓதி நடத்தப்பட்டது. எனவே, வரும் பிப்., 25ம் தேதி நடக்கும் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவும், நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கை நடத்த வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X