பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஐ.எஸ். அலுவலகத்திற்கு கப்பலுாரில் இடம் தேர்வு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மதுரை: கப்பலுாரில் தரச்சான்றுகள் வழங்கும் பி.ஐ.எஸ்.,(பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்ட்ஸ்) அலுவலகம் அமைய உள்ளது என மதுரையில் நடந்த ஏற்றுமதி விழிப்புணர்வு கருத்தரங்கில் தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம் பேசினார்.அவர் பேசியதாவது: மினரல் வாட்டர், பேக்கேஜ்டு வாட்டர், எலக்ட்ரிக் பொருட்கள் உட்பட 14 வகையான பொருட்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கட்டாயம். மதுரையில் தரச்சான்று வழங்கும்

மதுரை: கப்பலுாரில் தரச்சான்றுகள் வழங்கும் பி.ஐ.எஸ்.,(பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்ட்ஸ்) அலுவலகம் அமைய உள்ளது என மதுரையில் நடந்த ஏற்றுமதி விழிப்புணர்வு கருத்தரங்கில் தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம் பேசினார்.

அவர் பேசியதாவது: மினரல் வாட்டர், பேக்கேஜ்டு வாட்டர், எலக்ட்ரிக் பொருட்கள் உட்பட 14 வகையான பொருட்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கட்டாயம். மதுரையில் தரச்சான்று வழங்கும் பி.ஐ.எஸ். அலுவலகம் அமைய உள்ளது. தென்மாவட்ட மக்கள் இதன் மூலம் பயன்பெறலாம். நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழுக்கும் விண்ணப்பிக்கலாம். மாவட்ட தொழில் மையம் ஐ.எஸ்.ஓ. 9001 சான்றிதழ் பெற்றுஉள்ளது.சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான வரையறையை மாநில அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கான முதலீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ. ஒன்றரை கோடி மானியம் பெறலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X