மதுரை: 'தொடர்ந்து 12வது நாளாக அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலையால் வணிகத்துறையினர், பொது மக்கள் பாதிக்கப்படுவதால் கலால், வாட் வரியை குறைக்கவேண்டும்,' என, மதுரையில் தொழில் வர்த்தக சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.14, டீசல் ரூ.86.55 உயர்ந்து, ரூ.100ஐ நெருங்குகிறது. அனைத்து பொருட்கள் விலை உயரும். கடந்த மாத மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள்நலனுக்காக பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி ரூ. 2.50 விதிக்கப்படும். விலை உயராது என்றும், செஸ் மத்திய கலால் வரிக்குள் சரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது பெட்ரோல் ரூ.4.00, டீசல் ரூ.4.30 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் அடிப்படை விலை ரூ. 31.82. மத்திய அரசின் பெட்ரோல் கலால் வரி ரூ. 32.98, டீசலுக்கு ரூ.31.83. மாநில அரசின் வாட் வரி பெட்ரோலுக்கு (34 சதவீதம்) ரூ.19.48, டீசலுக்கு (25 சதவீதம்) ரூ.15.33, சாலை கட்டமைப்பு செஸ், விவசாயிகள் செஸ் என இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது அதிகபட்சம் 69 சதவீதம் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE