பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டு வினியோகத்தை முடுக்கி விடுமா உணவு துறை?

Added : பிப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், ரேஷன் கார்டு விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து, பயனாளிகளுக்கு கார்டு வழங்கும் பணியை, உணவுத்துறை முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அத்தியாவசிய பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். அதற்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை, உணவு வழங்கல் துறை உதவி

சென்னை:சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், ரேஷன் கார்டு விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து, பயனாளிகளுக்கு கார்டு வழங்கும் பணியை, உணவுத்துறை முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அத்தியாவசிய பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். அதற்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை, உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் பரிசீலித்து, விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு சென்று, தனி சமையல் அறையுடன் வசிப்பதை உறுதி செய்து, கார்டு வழங்க பரிந்துரைப்பர்.

அனைத்து அலுவலகங்களிலும், ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அவற்றை பரிசீலிக்கும் பணி, மந்தகதியில் நடக்கிறது. அதிகாரிகள், ஆய்விற்கு செல்லாமல், விண்ணப்பங்களை நிராகரிப்பதாகவும் புகார் எழுகின்றன.சட்டசபை தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் நடத்தை விதிகளை திரும்ப பெறும் வரை, புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாது.

எனவே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், ரேஷன் கார்டு விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து, பயனாளிகளுக்கு கார்டு வழங்கும் பணியை, உணவு துறை முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு அலுவலகத்திலும், தினமும் பெறப்படும் விண்ணப்பம், அதன் மேல் எடுத்த நடவடிக்கையை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான், விரைவாக தீர்வு காணப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
21-பிப்-202109:08:50 IST Report Abuse
R.RAMACHANDRAN அரசு உத்தரவுகளில் கூறப்படும் நிபந்தனைகளை கடைபிடித்தால் நூற்றுக்கு முப்பது சதவிகித ரேஷன் கார்டுகள் இல்லாமலிருக்கும். லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகள் கொடுத்து வருகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X