சென்னை:சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், ரேஷன் கார்டு விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து, பயனாளிகளுக்கு கார்டு வழங்கும் பணியை, உணவுத்துறை முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அத்தியாவசிய பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். அதற்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை, உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் பரிசீலித்து, விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு சென்று, தனி சமையல் அறையுடன் வசிப்பதை உறுதி செய்து, கார்டு வழங்க பரிந்துரைப்பர்.
அனைத்து அலுவலகங்களிலும், ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அவற்றை பரிசீலிக்கும் பணி, மந்தகதியில் நடக்கிறது. அதிகாரிகள், ஆய்விற்கு செல்லாமல், விண்ணப்பங்களை நிராகரிப்பதாகவும் புகார் எழுகின்றன.சட்டசபை தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் நடத்தை விதிகளை திரும்ப பெறும் வரை, புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாது.
எனவே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், ரேஷன் கார்டு விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து, பயனாளிகளுக்கு கார்டு வழங்கும் பணியை, உணவு துறை முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு அலுவலகத்திலும், தினமும் பெறப்படும் விண்ணப்பம், அதன் மேல் எடுத்த நடவடிக்கையை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான், விரைவாக தீர்வு காணப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE