சென்னை:'அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, ஐந்து ஆண்டுகள் கடந்தும், 6,500 ரூபாய் சம்பளம் மட்டுமே கிடைக்கிறது' என, அரசு, 'இ - சேவை' மைய ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெற, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் வழியாக, அரசு இ - சேவை மையங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில், மொத்தம், 583 அரசு இ - சேவை மையங்கள் செயல்படுகின்றன.இதில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் வசூலித்தல் உட்பட, 80-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, போதிய ஊதியம் வழங்கப்படவில்லை; கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு இ - சேவை மைய ஊழியர்கள் கூறியதாவது:அரசு இ - சேவை மையங்களில் மட்டும், 720 பேர் பணிபுரிகிறோம். ஆதார் பதிவுக்காக, 420 பேர் பணியாற்றுகிறோம்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும், எங்களுக்கு இதுவரை, 6,500 ரூபாய் மட்டுமே சம்பளம் கிடைக்கிறது.எங்களது குடும்ப சூழலை கருத்தில் வைத்து, எங்களது சம்பளத்தை, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது வேலையை, நிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE