வெறிச்சோடிய செம்பட்டி பஸ் ஸ்டாண்ட்: மெயின் ரோட்டில் நெரிசலால் தவிப்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
செம்பட்டி: செம்பட்டியில் கால்வாய் பணிக்காகபஸ்ஸ்டாண்ட் துண்டிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.செம்பட்டி ரவுண்டானா-, மதுரை ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளைஅகற்றியது. ரோட்டின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் பணி 3 மாதங்களுக்கு முன் துவங்கியது. பஸ் ஸ்டாண்டின் கிழக்கு நுழைவாயிலில், கால்வாயுடன்பாலம்

செம்பட்டி: செம்பட்டியில் கால்வாய் பணிக்காகபஸ்ஸ்டாண்ட் துண்டிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.செம்பட்டி ரவுண்டானா-, மதுரை ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளைஅகற்றியது. ரோட்டின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் பணி 3 மாதங்களுக்கு முன் துவங்கியது. பஸ் ஸ்டாண்டின் கிழக்கு நுழைவாயிலில், கால்வாயுடன்பாலம் கட்டப்படுகிறது.இப்பணிகளால் இரு வாரங்களாக பஸ் ஸ்டாண்ட் துண்டிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் வெளிப்புறத்தில் நிறுத்தப்படுகிறது. சிலபஸ்கள் ரவுண்டானா பகுதியுடன் திரும்புகின்றன. குமுளி ரோட்டில் திண்டுக்கல், வத்தலக்குண்டு, சித்தையன்கோட்டை பயணிகளும், மதுரை ரோட்டில் நிலக்கோட்டை, காமலாபுரம் பயணிகளும் காத்திருக்கின்றனர். டவுன், புறநகர் பஸ்களை நிறுத்த இடமற்ற சூழலில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களை நிறுத்துகின்றனர்.மெயின்ரோட்டில் நிறுத்தப்படும் பஸ்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தவிப்பிற்குள்ளாகின்றனர். போலீசார் இவற்றை முறைப்படுத்தவும், பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X