செம்பட்டி: வீ.கூத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு பொது அறிவுப்போட்டி நடத்தப்பட்டது.பரிசளிப்பு விழா தலைமையாசிரியர் சண்முகவேல் தலைமையில் நடந்தது. சுதந்திரபாண்டி, ஆத்துார் அரசு மருத்துவமனை டாக்டர் லியோன்வினோத்குமார் பரிசுகள் வழங்கினார். முதல் 3 இடங்களை வென்ற மாணவர்கள் சோலைமுத்து, சுதந்திரபாண்டி, சந்திரபிரகாஷ் ஆகியோருக்கு கேடயமும், 8 மாணவர்களுக்கு பொது அறிவுப்புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. வளங்குன்றா சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நிர்வாகி பிரதீப் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE