நிலக்கோட்டை: அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு எம்.டெக்., எம்.இ., எம்.பில்., படித்தவர்கள் விண்ணப்பித்ததால் நேர்காணல் அதிகாரிகளே திகைத்துப் போயினர்.நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக 3 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்தது. பி.டி.ஓ. லாரன்ஸ், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், நியமனக் குழு உறுப்பினர்கள் இதனை நடத்தினர்.நியமன கமிட்டியினர் கூறுகையில், ''அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 1103 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 973 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 100 பேரைத் தவிர மற்ற அனைவரும் முதுகலை பட்டதாரிகள். இவர்களில் எம்.டெக்., எம்.இ., எம்.பி.ஏ., எம்.பில்., படித்தவர்களும் அடக்கம். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரும் நேர்காணலுக்கு வந்திருந்தார்'' என்றனர். 'கால் காசுன்னாலும் கவர்மென்ட் காசுல்லா' என கிராமங்களில் சொலவடை உண்டு. அதை நிரூபிப்பது போல் 3 நாட்கள் நிகழ்வுகளும் இருந்ததாக கமிட்டியினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE