வெட்டப்படும் மரங்களுக்கு பதில் அதே அளவில் புதிய மரங்களை உருவாக்க வேண்டுமல்லவா. அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என்பது கசப்பான உண்மையே.
மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திண்டுக்கல்லில்- திருச்சி, நத்தம், பழநி ரோடுகள், ஒட்டன்சத்திரம்- - வடமதுரை ரோடுகள், நத்தம் -- மதுரை ரோடு மற்றும் திருப்பதி போல் மாற்றுவதற்காக பழநி நகரில் பல ஆயிரம் மரக்கன்றுகள் வெட்டி வீழ்த்தப்பட்டன.இவற்றில் பல இடங்களில் விரிவாக்க பணிகள் முடிந்தும், முடிவுறும் நிலையிலும் உள்ளன. ஆனால் வெட்டிய மரங்களுக்கு பதில் எங்கேயும் மரக்கன்றுகள் வைக்கவில்லை. வெட்டப்பட்ட மரங்களை நம்பி வாழ்ந்த பல்லுயிர்களும் இதனால் பாதித்துள்ளன. சுற்றுச்சூழல், இயற்கை சமநிலையும் பாதிக்கும் நிலை உள்ளது. ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்று நட வேண்டும் என்ற விதி இருந்தும் அலட்சியப் போக்குதான் உள்ளது.
வெப்பமயமாதல், மழை வளம் குறைதலால் சுற்றுச்சூழல் பாதிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பாதிப்புகள் மரங்கள் இல்லையெனில் ஏற்படும். திண்டுக்கல் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் மாவட்டம். இங்கு இருக்கிற மரங்களையும் வெட்டிவிட்டு மழைவளம் பாதிப்பதாக புலம்புவதில் அர்த்தம் இல்லை. மாவட்ட நிர்வாகம் ரோட்டோரம் மரங்களை நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE