கோர்ட் செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட கூட்டுறவு ஊழியர்கள் நிரந்தரம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : பிப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:கூட்டுறவு சங்கங்களில் 20 ஆண்டுகளுக்கு முன், வேலைவாய்ப்பகம் வழியாக அல்லாமல் நியமிக்கப்பட்ட ஊழியர்களை, பணிவரன்முறை செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2001 மார்ச், 12ம் தேதிக்கு முன், கூட்டுறவு சங்கங்கள், விற்பனை சங்கங்கள் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனையாளர், 'பேக்கர்' என, ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களை,

சென்னை:கூட்டுறவு சங்கங்களில் 20 ஆண்டுகளுக்கு முன், வேலைவாய்ப்பகம் வழியாக அல்லாமல் நியமிக்கப்பட்ட ஊழியர்களை, பணிவரன்முறை செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2001 மார்ச், 12ம் தேதிக்கு முன், கூட்டுறவு சங்கங்கள், விற்பனை சங்கங்கள் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனையாளர், 'பேக்கர்' என, ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களை, வேலைவாய்ப்பகம் வழியாக அல்லாமல், அந்தந்த சங்கங்களே தேர்ந்தெடுத்து நியமித்தன.

பல ஆண்டுகளாக, இவர்கள் பணியில் இருப்பதை கருதி, 2001 மார்ச், 12ல், கூட்டுறவுத் துறை, ஒரு உத்தரவை பிறப்பித்தது. வேலைவாய்ப்பகம் வழியாக அல்லாமல், 1980 ஜூலை, 8க்கு பின் நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளில், 480 நாட்கள் பணியாற்றியவர்களை, பணி வரன்முறை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, 35 ஆயிரம் ஊழியர்களில், 26 ஆயிரம் ஊழியர்களுக்கு, பணிவரன்முறை கிடைத்தது. நிர்வாக தாமதம் உள்ளிட்ட சில காரணங்களால், மீதி உள்ளவர்கள், பணிவரன் முறை செய்யப்படவில்லை. மற்றவர்களை போல், தங்களுக்கும் பணிவரன்முறை கோரி, உயர் நீதிமன்றத்தில், 100க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடுத்தனர்.

ஊழியர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் கே.செல்வராஜ், சுந்தரவதனம், பிரகாசம், உள்ளிட்டோரும், அரசு மற்றும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், சிறப்பு பிளீடர்கள் பால ரமேஷ், எல்.பி.சண்முகசுந்தரம் ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிய, 35 ஆயிரம் ஊழியர்களை பணி வரன்முறை செய்ய, அரசு முடிவெடுத்து, 'கட் - ஆப்' தேதியாக, 2001 மார்ச், 12 நிர்ணயிக்கப்பட்டது. இவர்களில், 26 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி வரன்முறை கிடைத்தது. மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை.

மனுதாரர்களை பொறுத்தவரை, கல்வி தகுதி உள்ளிட்ட அம்சங்களை பூர்த்தி செய்துள்ளனர். வேலைவாய்ப்பகம் வழியாக, இவர்கள் நியமிக்கப்படவில்லை. இது, வழக்கமானநியமனம் அல்ல என்பது தவிர, சட்டவிரோத நியமனம் எனக்கூற முடியாது.நீண்ட நாட்களாக, மனுதாரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பணி வரன்முறை செய்யாமல், இவர்களை வெளியேற்றினால், அரசியலமைப்பு சட்ட அடிப்படை உரிமை மறுக்கப்படுவது போலாகும்.உரிய தகுதியை பூர்த்தி செய்யும் மனுதாரர்கள் அனைவரையும், எட்டு வாரங்களில் பணி வரன்முறை செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தை அணுகாமல், மனுதாரர்களை போல் பணியாற்றுபவர்களுக்கும், பணி வரன் முறை சலுகையை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவால், 4,000 ஊழியர்களுக்கு மேல் பணி வரன்முறை பெறுவதாக, அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-பிப்-202118:05:10 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மகிஷ்சிதான் ஒரு ஊழியர்வைக்கீலுக்கு பீஸ்கொடுக்க பங்குத்தொகை எவ்வளவு. அரசு நிருவன அரசு உதவி பெறும் நிறுவனங்களின் நிர்வாகத்தில் கோர்ட் அதிகம்தலை யிடுவதை தவிற்கலாம்அரகராஎன்பவனுக்கு பாரமில்லை அமுது அளிப்பவனுக்கே பாரம் பாரத்தை சுமக்கனுமே அவரின் விருப்பம் தாங்கும் சுமக்கும்சக்தி க்கு யார் உதவுவர்.சேரும்போது யாரிடம் லஞ்சம் கொடுத்து (அரசியல்வாதிக்கு) சேர்ந்தனரோ பணி உறுதியாக கோர்ட்உத்தரவு கோர்ட்செலவு எம்மோமோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X