பொது செய்தி

தமிழ்நாடு

முக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்கள் கண்காணிப்பு: தேர்தலுக்கு முன் கைது நடவடிக்கை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த முன்விரோதம், மோதல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய 72 முக்கிய குற்றவாளிகளை கண்காணித்து, தேர்தலுக்கு முன் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.மாவட்டத்தை பொறுத்தவரையில் முன்விரோதம் காரணமாக மோதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதன் விளைவாக கொலைகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. தி.மு.க., பிரமுகர் அருண்குமார், கூலி தொழிலாளி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த முன்விரோதம், மோதல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய 72 முக்கிய குற்றவாளிகளை கண்காணித்து, தேர்தலுக்கு முன் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மாவட்டத்தை பொறுத்தவரையில் முன்விரோதம் காரணமாக மோதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதன் விளைவாக கொலைகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. தி.மு.க., பிரமுகர் அருண்குமார், கூலி தொழிலாளி செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அ.ம.மு.க., நிர்வாகி கலையரசன் ஆகியோரின் கொலைகள் திட்டமிட்டு முன்விரோதமாக நடந்தவை. எனவே முன்விரோதத்தால் நடக்கும் மோதல், கொலை சம்பவங்களை தடுக்கும்படி எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டார்.இதற்காக மாவட்டம் முழுவதும் பதிவான அடிதடி வழக்குகள் குறித்த விவரங்களை சேகரிக்கவும் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாவட்டத்தில் 892 அடிதடி வழக்குகளும், மோதலுக்கான காரணங்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதன்படி 650 பேர் முக்கிய வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்ளனர். இதில் 72 பேர் ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.இவர்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ரகசிய கண்காணிப்பு நடக்கிறது. தேர்தலின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X