வேடசந்துார்; வேடசந்துார், வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றிய பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேடசந்துாரில் நாளை (பிப்.22) காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை நடக்க உள்ளது.தமிழக அரசின் ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், படித்தஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் இம்முகாம் நடக்கிறது. வேடசந்துார் ஒன்றியஅலுவலகம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் முகாம் நடைபெறும்.18 முதல் 35 வயதுவரையுள்ள, எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரைபடித்த இருபாலரும் பங்கேற்கலாம். கல்விச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார்,ஜாதிச்சான்று மற்றும் போட்டோ கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் பயனாளிகளுக்கு உணவு தயாரிப்பு, டெய்லரிங், கணினிபயிற்சி, டிராக்டர் ஓட்டுனர் மற்றும் மெக்கானிக் பயிற்சி அளிக்கப்படஉள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE