போக்குவரத்து நெரிசலுக்கு ஒருபோதும் தீர்வே இல்லையா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசலுக்கு ஒருபோதும் தீர்வே இல்லையா

Added : பிப் 21, 2021
Share
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வே இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.வத்தலக்குண்டு பஸ்ஸ்டாண்ட் நகரின் நடுப்பகுதியில் உள்ளதால் பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல வேண்டியிருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகி விட்டதால் வாகன நெருக்கடியும் அதிகமாக உள்ளது.கொரோனாவிற்கு பின் ரோட்டோர கடைகள் அதிகரித்து விட்டன. அவர்களை போலீசார்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வே இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.வத்தலக்குண்டு பஸ்ஸ்டாண்ட் நகரின் நடுப்பகுதியில் உள்ளதால் பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல வேண்டியிருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகி விட்டதால் வாகன நெருக்கடியும் அதிகமாக உள்ளது.கொரோனாவிற்கு பின் ரோட்டோர கடைகள் அதிகரித்து விட்டன. அவர்களை போலீசார் ஒன்றும் செய்ய முடியவில்லை. இரு சக்கர வாகனங்கள் அதிகரித்து விட்டதால் ஆங்காங்கே நிறுத்திச் சென்று விடுகின்றனர். இதனால் பஸ் போக்குவரத்தில் பிரச்னை ஏற்படுகிறது.ஆட்டோக்களின் தொல்லையும் அதிகமாகி பொதுமக்களின் பொறுமையை சோதிக்கிறது. இதனை விட பஸ் டிரைவர்களின் நிலைமை தான் மோசமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண பேரூராட்சி, போலீஸ், வர்த்தகர் சங்கம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X