பொது செய்தி

தமிழ்நாடு

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ரத்த கையெழுத்து முடிவு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
வேடசந்துார்: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் ரத்த கையெழுத்து பெற்று மனு அனுப்பஉள்ளதாக, மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தெரிவித்தார்.2003 ஏப்ரல் முதல் அரசு பணியில் சேரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம்அமலில் உள்ளது. இதுவரை பணியில் சேர்ந்த 6 லட்சம் பேரில் 14ஆயிரம் பேர் ஓய்வு பெற்றும், பணியின் போதே இறந்தும் உள்ளனர். இவர்களுக்கு

வேடசந்துார்: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் ரத்த கையெழுத்து பெற்று மனு அனுப்பஉள்ளதாக, மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தெரிவித்தார்.2003 ஏப்ரல் முதல் அரசு பணியில் சேரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம்அமலில் உள்ளது. இதுவரை பணியில் சேர்ந்த 6 லட்சம் பேரில் 14ஆயிரம் பேர் ஓய்வு பெற்றும், பணியின் போதே இறந்தும் உள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை கிடைக்கவில்லை.இதனால் பழைய ஓய்வூதியதிட்டத்தையே செயல்படுத்த வலியுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதுவரை முதல்வர், துணை முதல்வரிடம் மனுக்களை கொடுத்துள்ளனர். இருந்தும் நடவடிக்கை இல்லை.கடைசி முயற்சியாக 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்மற்றும் ஆசிரியர்களிடையே பிப்.23, 24, 25 தேதிகளில் ரத்த கையெழுத்து பெற்று தமிழகமுதல்வருக்கு அனுப்புவது என தீர்மானித்துள்ளனர். மேலும் பிப்.28 மதுரையில் மாநாடு நடத்தவும் தீர்மானித்துள்ளதாக மாநிலஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X