பல்லடம்:பல்லடம் அருகே, போலி ஆதார் அட்டையுடன், அசாம் தொழிலாளி ஒருவர் சிக்கினார்.அசாம் மாநிலம், தரங் பகுதியை சேர்ந்தவர் மொகர் அலி, 23; திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, அருள்புரத்தில் அறை வாடகைக்கு எடுத்து தங்கி, பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரது ஆதார் அட்டையை பெற்ற, வீட்டு உரிமையாளர் சரிபார்த்தபோது, போலி என்று தெரிய வந்தது. பல்லடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு, அவர் தகவல் அளித்தார். மொகர் அலி, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்தானா அல்லது வங்கதேசத்தில் இருந்து வந்தவரா, போலி ஆதார் அட்டையை தயாரித்து வழங்கியது யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'திருப்பூர், பல்லடம் பகுதியில், பனியன், விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, விவசாயப்பணி என பல்வேறு வேலைகளில், வடமாநிலத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்குக்கு பின், போலீசார் அறிவுறுத்தல்படி, தற்போது தனியார் நிறுவனங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள், 'ஆதார்' நகலை கேட்டு பெறுகின்றனர். இது உண்மையானது தானா என்று பெரும்பாலானோர் சோதித்து பார்ப்பதில்லை.பலரதுஆதார் அட்டைகள் போலியாக இருக்கலாம்என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE