வடமதுரை: வடமதுரை அருகே காதல் மனைவி கடத்தப்பட்டதாக வாலிபர் போலீசில் புகார் செய்தார்.ஈரோடு மாவட்டம் சென்னிமலை பிடாரியூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்துபவர் விக்னேஷ்வரன் 24. உலகபுரத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினியை 19, காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி விக்னேஷ்வரனை தென்னம்பட்டி கோயிலில் திருமணம் முடித்த பிரியதர்ஷினி, திருமண பதிவுக்காக வடமதுரை சார் பதிவாளர் அலுவலகம் வந்தனர்.சில படிவம் இல்லாததால் பிப்.22ல் வருமாறு திருப்பி அனுப்பினர். இதனால் தென்னம்பட்டி உறவினர் வீட்டில் காதல் திருமண ஜோடி தங்கியிருந்தது. இங்கு தங்கியிருப்பதை தெரிந்த பெண் தரப்பை சேர்ந்த 9 பேர் நேற்று காலை காரில் வந்து விக்னேஷ்வரனை தாக்கிவிட்டு பிரியதர்ஷினியை கடத்திச் சென்றுவிட்டதாக மாவட்ட போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE