வடமதுரை: காணப்பாடி மாலப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் தனபாலன் 22. திருச்சியில் ஒரு பயிற்சி மையத்தில் நீட் தேர்விற்காக படித்த போது, அங்கு படித்த சிறைச்சாலை வார்டன் மகள் சொர்ணாவுடன் 21, காதல் கொண்டார். பெற்றோர் கண்டித்ததால் சொர்ணா, வடமதுரை காதலன் வீட்டிற்கு வந்தார். இருவரும் கோயில் ஒன்றில் திருமணம் முடித்தனர்.* வளவிசெட்டிபட்டி ரவி மகள் தனலட்சுமி 21. டிப்ளமோ நர்சிங் படிப்பு முடிந்து வீட்டில் இருந்தவரை காணவில்லை. பெற்றோர் புகாரில் போலீசார் தேடி வந்தனர். அருகிலுள்ள எஸ்.புதுப்பட்டி கணேசமூர்த்தி 22, என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், பாதுகாப்பு வேண்டும் எனக்கேட்டு தனலட்சுமி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சமடைந்தார். இரு ஜோடிகளின் பெற்றோரை வரவழைத்து போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE