பழநி: பழநி வட்டாரம் ஆயக்குடி, அய்யம்புள்ளி, புதுஅச்சு, வண்டிவாய்க்கால், சண்முகநதி, காரமடை, வையாபுரி பாசன பகுதிகளில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவிற்கு மேல் நெல்சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து நல்ல மழை பெய்ததால், மேலும் சில ஆயிரம் எக்டேர் சாகுபடி அதிகரித்தது.இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் அறுவடை செய்த நெல்மணிகளில் அதிகளவில் பதராகி உள்ளது.ஒரு குழி (60 சென்ட்) நிலத்தில் ஆண்டு தோறும் கிடைக்கும் மகசூலை விட பாதிக்கும் மேல் குறைந்துள்ளது. இதனால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நெல் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.விவசாயி மருதமுத்து கூறுகையில், இந்த ஆண்டு விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. அறுவடைக்கு பயன்படுத்தும் வாகனங்களின் வாடகை அதிகரித்ததாலும், நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததாலும் அதிக நஷ்டம் எற்பட்டுள்ளது. வைக்கோல் விலையும் குறைவாகவே உள்ளது. அறுவடை நேரத்திலும் மழை பெய்வதால் வைக்கோலும் விற்க முடியவில்லை'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE